வெள்ளகோவிலில் அரசு நிலத்தில் மரம் வெட்டி கடத்தல்

வெள்ளகோவில், பிப். 13:   வெள்ளகோவில் நகரத்தில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி, பழைய பஸ் நிலையம் அருகே நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமாக இடம் உள்ளது. இதில் முன்பு பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது. ஆனால் நகராட்சியாக தரம் உயர்த்திய பின், மாற்று இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு அங்கு செயல்பட துவங்கியது.

இதையடுத்து கடந்த 10 ஆண்டாக அந்த கட்டிடத்தில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வந்தது. கடந்த ஆண்டு தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டம் கட்டப்பட்டு தீயணைப்பு நிலையம் அங்கு செயல்பட துவங்கியது. தற்போது பழைய போரூராட்சி அலுவலக கட்டடம் பயன்படுத்த படாமல் இருக்கிறது.

  இந்த இடத்தில் 35 ஆண்டுகள் பழமையான பூவரசு, வேம்பு, சீனிபுளியமரம் உள்பட 5 மரங்கள் இருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அந்த மரங்களை இரவோடு இரவாக வெட்டி கடத்தியுள்ளனர். மரம் வெட்டப்பட்டது தெரியாமல் இருக்க மண்ணை கொட்டி சமன் செய்துள்ளனர். மேலும் சுற்று சுவர்களை இடித்துள்ளனர். அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்து மரம் வெட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: