மஞ்சள் விற்பனை மின்னணு பரிவர்த்தனை மூலம் விவசாயிகள் கணக்கில் ரூ.53.10 கோடி

ஈரோடு, பிப்.13: ஈரோடு மாவட்டத்தில் 8 ஆயிரத்து 105 மெட்ரிக் டன் மஞ்சள் விற்பனை செய்ததாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் ரூ.53.10 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு விற்பனை குழுவிற்கு விவசாய விளைபொருட்கள் வரத்து 2018-19ம் நிதியாண்டிற்கு 2 லட்சத்து 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் இலக்கு  நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 941 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

வருவாய் இலக்காக ரூ.14.80 கோடி நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை 11 கோடி ரூபாயை நெருங்கி உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் வரத்து மற்றும் வருவாய் இனங்களில் முழு சாதனையை எட்டி விடும்.

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தை 1.11.2017 முதல் துவங்கப்பட்டது. இதில், 5 ஆயிரத்து 965 விவசாயிகளும், 68 வியாபாரிகளும் இ-நாம் திட்டத்தின் மூலம் 446  மெட்ரிக் டன் விளைபொருட்கள் 2 கோடியே 23 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2.11.2017ல் வேளாண் சந்தை துவங்கப்பட்டது. இதில், 6 ஆயிரத்து 634 விவசாயிகளும், 51 வியாபாரிகளும் பதிவு செய்யப்பட்டு இ-நாம் திட்டத்தின்கீழ் 575 மெட்ரிக் டன் விளைபொருட்கள் 2 கோடியே 86 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய்க்கு  விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4 ஆயிரத்து 760 விவசாயிகளும், 24 வியாபாரிகளும் பதிவு செய்து இ-நாம் திட்டத்தில் 963 மெட்ரிக் டன் விளை பொருட்கள் 3 கோடியே 76 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது.

பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 18 மெட்ரிக் டன் விளை பொருட்கள் 11.23 லட்சம் மதிப்பீட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 53 கோடியே 47 லட்சத்து 43 ஆயிரத்து 454 ரூபாய் மதிப்பீட்டில்  8 ஆயிரத்து 105 மெட்ரிக் டன் மஞ்சள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த மின்னணு பரிவர்த்தனை மூலமாக 13 ஆயிரத்து 884 விவசாயிகளுக்கு ரூ.53.10 கோடி நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலம் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு பூதப்பாடியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலும், மைலம்பாடியில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது.

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒருகோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலும் பரிவர்த்தனை கூடம் அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது.

அளுக்குளி குளிர்பதன கிடங்கில் மஞ்சள் மாத வாடகை ஒரு மெட்ரிக் டன்னிற்கு 400 ரூபாய் இருந்து வந்தது. தற்போது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் இருப்பு வைக்கப்படும் விளை பொருட்களுக்கு குறைந்த அளவிலான வாடகையும், இருப்பு வைகக்ப்படும் விளை பொருட்களுக்கு மதிப்பில் 50 சதவீதமும், அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரையிலும் பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது.

விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு ஈரோடு விற்பனை குழு வேளாண் துணை இயக்குநரும், செயலாளருமான சின்னசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: