கோவை மேட்டுப்பாளையம் இடையே ஞாயிற்று கிழமைகளில் பாசஞ்சர் ரயில் இயக்க அனுமதி

ேகாவை, பிப்.13: கோவை -மேட்டுப்பாளையம் இடையே வாரத்தில் 6 நாட்களுக்கு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வரும் 17ம் தேதி முதல் ஞாயிற்று கிழமைகளிலும், இனி பாசஞ்சர் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 8.15 மணி, 10.40 மணி, மதியம் 1 மணி, மாலை 4.30 மணிக்கு ரயில் புறப்பட்டு கோவை ரயில் நிலையம் வந்தடையும். கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு தினமும் காலை 9.30 மணி, 11.50 மணி, மதியம் 3.15 மணி, மாலை 5.55 மணிக்கு பாசஞ்சர் ரயில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் சென்றடையும். கோவை மேட்டுப்பாளையம் ரயில் மார்க்கத்தில் 35 கி.மீ தூரத்திற்கு 8 முறை இந்த ரயில் இந்த ரயில் துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை ரயில் நிலையத்தில் இந்த ரயில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீண்ட காலமாக ஞாயிற்று கிழமைகளிலும் கோவை மேட்டுப்பாளையம் மார்க்கத்தில் ரயில் இயக்க கோரிக்கை விடப்பட்டு வந்தது.வரும் 17ம் தேதி ஞாயிற்று கிழமையிலும் பாசஞ்சர் ரயில் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படவுள்ளதால் ேகாவை ரயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜமீல், செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: