வெளி மாநில வரத்து அதிகரிப்பு நீலகிரி பட்டாணி விலை குறைந்தது ஒரு கிலோ ரூ.40க்கு விற்பனை

ஊட்டி, பிப். 13: வெளி  மாநிலத்தில் இருந்து பச்சை பட்டாணி வரத்து அதிகரித்துள்ளதால், நீலகிரியில்  விளையும் பச்சை பட்டாணி விலை குறைந்துள்ளது.

தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து  அதிகளவு பட்டாணி கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதால் உள்ளூர் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு  முன் நீலகிரி ஸ்வீட் பட்டாணி ஒருகிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது பெங்களூர் பட்டாணி வந்த நிலையில், நீலகிரியில் விளையும் பட்டாணி  விலை  குறைந்தது. தற்போது இரு மாநில பட்டாணிகளும் ஒரு கிலோ ரூ.40க்கே  விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நீலகிரியில் பட்டாணி பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Related Stories: