பாதுகாப்பற்ற குடிநீரால் நோய் பரவும் அபாயம்

பந்தலூர், பிப்.13 : பந்தலூர் அருகே பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு நோய்பரவும் அபயாம் நீடிக்கிறது.

பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி கையுன்னி காலியோடு, அம்பலகுன்னு ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 15 ஆண்டுக்கு முன் சேரங்கோடு ஊராட்சி மூலம் கிணறு அமைக்கப்பட்டது. இதன் மூலம் பல்வேறு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் குடிநீர் கிணற்றில் மேல் மூடி போடாததால் மரங்களில் இருந்து விழும் இலைகள், தூசிகள்  தண்ணீரில் கலக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த 10 வருடத்திற்கம் மேலாக இந்த கிணறு தூர்வாரப்படாமல் உள்ளதால் குடிநீர் பாதுகாப்பற்று காணப்படுகிறது. எனவே, சேரங்கோடு ஊராட்சிக்கு குடிநீர்  கிணற்றுக்கு மேல் மூடி அமைத்து சுத்தமான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: