நீதிமன்ற கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த கோரி வக்கீல்கள் மனு

ஈரோடு, பிப்.13:  ஈரோடு நீதிமன்றத்தில் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரி கலெக்டரிடம் வக்கீல்கள் நேற்று மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:

வக்கீல்களுக்கு நீதிமன்றத்தில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். பெண் வழக்கறிஞர்களுக்கு தனி கட்டிடம் மற்றும் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும். வக்கீல்கள் மற்றும் அவர்களது குடும்ப பாதுகாப்பிற்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

வக்கீல்களுக்கு சொந்த வீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட உதவி மையம், சட்ட ஆலோசனைகளுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கு பதில், வக்கீல்களை நியமிக்க வேண்டும்.

5 ஆண்டுகளுக்கு மேல் நீதிமன்றங்களில் இளநிலை வக்கீலாக  இருப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

Related Stories: