ஈரோடு மாவட்டத்தில் 2,800 பயனாளிகளுக்கு கோழிகுஞ்சுகள்

ஈரோடு, பிப். 13: கோழி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் கிராமப்புற ஏழை பெண்கள் பயன் பெறும் வகையில் அசில் இன நாட்டுகோழிகள் மற்றும் கூண்டுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின்கீழ் 14 ஊராட்சி ஒன்றியங்களில் வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ள தலா 200 பயனாளிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு 2 ஆயிரத்து 800 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 50 அசில் நாட்டுகோழி குஞ்சுகளும், கூண்டுகள் அமைத்த பின் அவர்களது வங்கி கணக்கில் 2 ஆயிரத்து 500 ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது.

மேலும், பயனாளிகளுக்கு ஒருநாள் பயிற்சிக்கு 150 ரூபாயும், 30 ரூபாய் மதிப்பிலான பயிற்சி கையேடும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும்  பயனாளிகள் ஒரு குழுவாக அமைக்கும் வகையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.  2018-19ம்ஶஆண்டில் வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ள கிராமப்புற பெண்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு தொடர்ந்து வருவாயை பெருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கோழிகள் வழங்கப்படுவது மட்டுமல்லாமல் கால்நடை டாக்டர்கள் மூலமாக கோழிகளுக்கு தேவையான தடுப்பூசி மற்றும் இதர சிகிச்சையை முறையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Related Stories: