பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, பிப். 13: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு அருகே சித்தோடு ஆவின் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு விஜயமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் முனுசாமி, ஈரோடு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்தும் பருத்தி கொட்டை, புண்ணாக்கு, தவிடு, கலப்பு தீவனங்கள் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் பசும்பால் லிட்டருக்கு 35 ரூபாயும், எருமை பாலுக்கு 45 ரூபாயும் என கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

கொள்முதல் விலையை உயர்த்தும்போது விற்பனை விலையை உயர்த்தாமல் இருக்க கர்நாடக அரசை போல லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும், பால்பணம் பாக்கி முழுவதையும் உடனடியாக வழங்க வேண்டும்.

அனைத்து சங்கங்களிலும் போனஸ், ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: