பொதுமக்கள் கூடும் இடத்தில் இலவச சுகாதார வளாகம் அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி,பிப்.13: அரவக்குறிச்சியில் பொதுமக்கள் கூடும் முக்கிமான இடங்களில் இயற்கை உபாதை கழிக்க இலவச சுகாதார வளாகம் அமைத்த தர வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சி தாலுகா தலைமையிடமாக உள்ளது. அரவக்குறிச்சியின் தெற்கே தாலுகா அலுவலகம், நெடுஞ்சாலைதுறை அலுவலகம், தீயணைப்பு நிலையம், தொலைபேசி நிலைய அலுவலகம், மேற்கே பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மை அலுவலகம், காவல் நிலையம், கல்வி அலுவலகம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வடக்கே தபால் அலுவலகம், போக்குவரத்து அலுவலகம் என பல்வேறு முக்கிமான அலுவலகங்கள் அரவக்குறிச்சி பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன. இந்த அலுவலகங்களுக்கும் மற்றும் பல்வேறு வேலை நிமித்தமாகவும் அரவக்குறிச்சி ஒன்றியத்தின் 20 ஊராட்சிகளில் இருந்தும் தினசரி ஏராளான வெளியூர்

பொதுமக்கள் அரவக்குறிச்சி வந்து செல்லுகின்றனர். இவர்களின் வேலையின் நிலையைப் பொறுத்து காலையில் அரவக்குறிச்சி வருபவர்கள் மாலை வரை காத்திருந்து அலுவலகங்களில் அவரவர் வேலையை முடித்துக் கொண்டு திரும்ப வேண்டிய நிலை உள்ளது. பேரூந்தில் செல்ல ஏராளமான பயணிகள் காத்திருக்கின்றனர்.

இங்குள்ள மளிகைக் கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு ஏராளமான கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வங்குவதற்காக தினசரி வந்து செல்லுகின்றனர். இவ்வளவு பொதுமக்கள் வந்து செல்லும் அரவக்குறிச்சியில் பொதுமக்கள் சிறுநீர் உள்ளிட்ட தங்கள் இயற்கை உபாதை கழிக்க பொதுக்கழிப்பிடம் எங்கும் இல்லை. ஆகையால் ஆண்கள் சிறுநீர் உள்ளிட்ட தங்கள் இயற்கை உபாதைகளை கிடைத்த இடத்தில் கழிக்கின்றனர்.

இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகின்றது. ஆனால் மறைவான பகுதி இல்லாமல் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகையால் அரவக்குறிச்சியிலுள்ள பேரூந்து நிறுத்தங்களான தாலுகா அலுவலம் அருகில், ஏவிஎம் கார்னர் மற்றும் மேற்கே பேரூந்து நிலைய பஸ் நிறுத்தம், காவல் நிலையம் அருகில் ஆகிய

பொதுமக்கள் கூடும் முக்கிமான இடங்களில் பொதுமக்கள் நலன் கருதி, இயற்கை உபாதையை கழிக்க இலவச கழிப்பிடம் அமைத்த தர வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: