கரூர் மாவட்டத்தில் 2ஆயிரம் பழுதடைந்த வீடுகளை பராமரிக்க ஆணை

கரூர்,பிப்.13: கரூர் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் 2ஆயிரம் பழுத டைந்த வீடுகளை பராமரிப்பதற்கானஆணைவழங்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பொதுமக்கள் பழுதடைந்த  நிலையில் உள்ள வீடுகளை கட்டித்தர வலியுறுத்தினர். இதனை யடுத்து பராமரிப்பு  பணி மேற்கொள்ள ஒரு வீட்டிற்கு தலா ரூ.50ஆயிரம் வழங்கப் படுகிறது. பகுதி  சேதம் அடைந்த வீடுகளுக்கு பழுதுபார்க்க உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 பாதிப்படைந்த வீடுகளாக மாவட்டம் முழுவதும் 643 வீடுகள்   கணக்கெடுக்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு முதல்வரின் பசுமை வீடுகள், பிரதமரின்  வீடுகட்டும் திட்டத்தின்கீழ்  புதிய வீடுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டு  நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முமைகயின்  மூலம்கரூர் ஒன்றியத்தில் 300வீடுகள், தாந்தோணி ஒன்றியத்தில் 350வீடுகள், அரவக்குறிச்சி ஓன்றியத்தில் 150வீடுகள், க,பரமத்தி ஒன்றியத்தில்  300வீடுகள், குளித்தலை ஒன்றியத்தில் 130வீடுகள். கிருஷ்ணராயபுரம்  ஒன்றியத்தில் 300வீடுகள். கடவூர் ஒன்றியத்தில் 250வீடுகள், தோகமலை  ஒன்றியத்தில் 314வீடுகள், என முதல்கட்டமாக 2094 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு  ஒரு வீட்டிற்கு தலா ரூ.50ஆயிரம் வீதம் ரூ.10.47 கோடி மதிப்பில் வீடுகளை  புணரமைப்பு செய்துகொள்ள ஆணைகளை போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்ஆர்,  விஜயபாஸ்கர் வழங்கினார்.

Related Stories: