தொடர் திருட்டை தடுக்க இரவுநேர ரோந்து பணிக்கு போலீசார் நியமிக்கப்படுவார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர்,பிப்.13: தாந்தோணிமலை, காந்திகிராமம் பகுதிகளில் இரவு நேரத்தில் ரோந்து பணியில்  அதிகளவு போலீசார்களை ஈடுபடுத்திட வேண்டும் என பொது மக்கள்  எதிர்பார்க்கின்றனர்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட தெற்கு மற்றும் வடக்கு  காந்திகிராமம் பகுதிகளில் பெருவாரியான தெருக்களில் தனித்தனி வீடுகள்தான்  அதிகளவு உள்ளன. இந் நிலையில், இதுபோன்ற பகுதிகளை குறி வைத்து இரவு  நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.  

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காந்திகிராமம் பகுதியில்தான் அதிகளவு  திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன. தற்போதைய, நிலையில், தாந்தோணிமலை பகுதிகளான  பூங்காநகர், அசோக்நகர், பாரதிதாசன் நகர் போன்ற பகுதிகளில் பூட்டியிருந்த  வீட்டின் கதவை உடைத்து, கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று  வருகிறது.

பசுபதிபாளையம் மற்றும் தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைகள்  அதிகளவு பரப்பளவை கொண்டவை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான், பசுபதி  பாளையம் எல்லையில் இருந்து பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு, புதிதாக தாந்  தோணிமலை காவல் நிலையம் உருவாக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் இருந்து  வருகிறது.

இந்நிலையில், இரண்டு காவல் நிலைய பகுதிகளிலும் அடிக்கடி  திருட்டு சம்பவ ங்கள் நடை பெற்று வருவதால் பொதுமக்கள் பீதியிலும்,  விரக்தியிலும் உள்ளனர். எனவே, இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  இரவு நேரங்களில் ரோந்து பணியில் அதிகளவு போலீசார்களை ஈடுபடுத்திட  அதிகாரிகள் நடவடி க்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும்  எதிர்பார்க்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு,  ஆய்வு மேற்கொண்டு ரோ ந்து பணியில் கூடுதல் போலீசார்களை நியமிக்க நடவடிக்கை  எடுக்க வேண் டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: