காகித ஆலை கழிவால் கால்நடைகள் பாதிப்பு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கரூர்,பிப்.13: காகித ஆலை கழிவுகளால் பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

 காகித ஆலை கழிவுநீர் வாய்க்காலில் கலப்பதால் கால்நடைகள் பாதிக்கப்படுகிறது.  பொதுமக்கள் குடிநீர் ஆதாரம்பாதிக்கப்படுகிறது.  விவசாயம் செய்யமுடியவில்லை. கால்நடைகளுக்கும் குடிநீருக்கும் பயனில்லாததாக மாறி வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,   கழிவு நீரைசுத்திகரிப்பு செய்து பயன்படுத்துவதாக தொடர்ந்து அதிகாரிகள் தவறான தகவலை கூறுகின்றனர். வந்து பார்ப்பதும் இல்லை. பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. தோட்டக்குறிச்சி முதல் நெரூர் வரை எங்களின் வாழ்வாதாரமே போய்விட்டது. 1984ல் ஒருயூனிட் போடப்பட்டது, தற்போது 3யூனிட் உற்பத்தி நடக்கிறது,.

 1990முதல் கழிவுநீர் பாதிப்பை கூறிவருகிறோம் எந்த நடவடிக்கையும் இல்லை. கிணறுகள் எல்லாம் பாசனம் படிந்து காணப்படுகிறது. சுத்திரிப்பு முறைகளை பின்பற்றவில்லை ஆய்வுக்குழுவே தெரிவித்துள்ளது. கோர்ட்டு உத்தரவின்படி சுத்திகரிப்பு முறைகளை பின்பற்றுவதில்லை. புகழூர் கால்வாயில் கழிவு நீர் தேங்குவதை நிறுத்தவேண்டும்.

ஆலைக்கழிவு நீரால் புகழூரான் வாய்க்கால், வாங்கல் வாய்க்கால் நெரூர் வாய்க்கால் என 15ஆயிரம் ஏக்கர்விளைநிலம் நேர்முகமாகவும். மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கழிவுநீரை விட்டதன் காரணமாக தோட்டக்குறிச்சிமுதல் நெரூர் வரை வளமான நிலங்கள் கலர்,உவர் நிலமாகி நிலம் செத்துக்கொண்டிருக்கிறது. வாழை, கரும்பு, நெல், வெற்றிலை பயிரிட்டு வந்த நாங்கள் இப்போது கோரையைத்தவிர வேறு எந்த பயிரும் செய்யமுடியாத நிலையில் இருக்கிறோம்.

 ஆலைக்கழிவுநீரால் சுத்தமான தண்ணீரும், வளமான 15ஆயிரம் ஏக்கர் நிலமும் செத்துக்கொண்டிருக்கிறது. இந்தநிலை நீடித்தால் மக்கள் எதிர்காலத்தில் எப்படி வாழ்வது எங்கேபோவது. மாசுக்கட்டுப்பாட்டுவாரியம், பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்புகோட்ட அதிகாரிகள் கண்டும்காணாமல் இருக்கின்றனர். எனவே இதற்குஒரு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: