கரூர் அமராவதி ஆற்றில் மணல் கடத்தலுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் கலெக்டரிடம் மக்கள் புகார்

கரூர், பிப்.13: கரூர் அமராவதி ஆற்றில் மணல் கடத்தலுக்கு துணை கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அன்பழகன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.

அப்போது சாமானிய மக்கள் நலக்கட்சி  சார்பில் அளித்த மனுவில், கரூர் அமராவதி ஆற்றில் மாவட்ட நிர்வாகம்  4 இடங்களில் மணல் அள்ள அனுமதி வழங்கியது. ஆனால் கோர்ட்டு  தடையையும் மீறி கடந்த 2 நாட்களாக அமராவதி ஆற்றில் இரவு நேரங்களில்  மாட்டு வண்டிகளில் சுமார் 500க்கும் அதிகமான வண்டிகளில் மணல்  திருடப்பட்டு வருகிறது. அதிகரிகள் உடந்தையாக உள்ளனர். இதுகுறித்து  ஆதாரத்துடன் மனுஅளித்தும் நடவடிக்கை இல்லை.  இரவு நேரங்களில்  மேலப்பாளையம், சணப்பிரட்டி, பகுதியில் திருடப்படும் மணல் பசுபதிபாளையம்  காவல்நிலையம், காந்திகிராமம் போலீஸ் பீட் வழியாகத்தான் செல்கிறது. எந்த  போலீஸ் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. மேலும் செல்லாண்டிபாளையம்,  பெரியாண்டாங்கோயில், விசுவநாதபுரி, பஞ்சமாதேவி, பகுதிகளில் திருடப்படும்  மணல் மாட்டுவண்டிகளில் அனைத்து போலீஸ் பீட் வழிகாயத்தான் செல்கிறது. மணல்  திருட்டுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தில்  நடவடிக்கை எடுக்கவேண்டும். அதிகாரிகள் கண்டுகொள்ளப்படாத நிலை தான் மணல்  திருட்டு தொடர காரணம்.

 கரூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிகள்  தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து மனு கொடுத்தும்  பயனில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: