திருவிளையாட்டம் கிராமத்தில் காப்பீட்டு தொகை வழங்க அறுவடை பரிசோதனை 4 இடங்களில் நடந்தது

தரங்கம்பாடி, பிப்.13: நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே திருவிளையாட்டம் கிராமத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்திற்காக பயிர் அறுவடை பரிசோதனை 4 இடங்

களில் நடைபெற்றது.

2018-19ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்ய திருவிளையாட்டம் கிராமத்தில் 4 இடங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள வயல்களில் 5 அடி நீளம், 5 அடி அகல பரப்பில் விளைந்துள்ள பயிர்களை அறுவடை செய்து மகசூலை கணக்கிட்டனர். இதன் அடிப்படையில் புள்ளியல்துறை வேளாண்துறை, காப்பீட்டுகழகம், மூன்றும் இணைந்து விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கும். ஒவ்வொரு கிராமத்திலும் இந்த பயிர் அறுவடை பரிசோதனை குலுக்கல் முறையில் எடுக்கப்பட்ட ரேண்டம் எண் அடிப்படையில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அறுவடை பரி

சோதனை நடைபெறும்.

அதன் அடிப்படையிலேயே விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கப்படும். இதில் வேளாண் துறையை சேர்ந்த கார்த்திக், காப்பீட்டு கழகத்தை சேர்ந்த ஜோதிபாசு மற்றும் விவசாயிகள் துரைராஜ், இன்பராஜ் கலந்து கொண்டனர்.

Related Stories: