காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் ரூ.1.13 கோடியில் சாலைகளை மேம்படுத்தும் பணி துவக்கம்

காரைக்கால், பிப்.13: காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் சாலைகளை மேம்படுத்த ரூ.1.13 கோடி செலவில் பூமிபூஜை நடைபெற்றது.

புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை பரிந்துரையின் மூலம், ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தின் சார்பில், திருநள்ளாறு தொகுதியை சேர்ந்த அம்பகரத்தூர் காலனி பேட்டையில் உள்ள சுடுகாட்டுப் பாதையை மேம்படுத்தல் பணிக்காக, ரூ. 12.34 லட்சம் செலவிலும், குமரக்குடிபேட் பகுதியிலுள்ள சுடுகாட்டுப் பாதையை மேம்படுத்த, ரூ.2.26 லட்சம் செலவிலும், தேனூர் சந்தைவெளித் தோப்பு பகுதியில் உள்ள உட்புற சாலையை மேம்படுத்துவதற்காக ரூ.4.40 லட்சம் செலவிலும்,  செருமாவிளங்கை-பத்தகுடி சிவன் கோயில் வரையில் உள்ள சாலையை மேம்படுத்த ரூ.29.29 லட்சம் செலவிலும், கருக்கன்குடி-தேவாபுரம் வரை உள்ள சாலையை மேம்படுத்த ரூ.8.75 லட்சம் செலவிலும், பேட்டை மற்றும் கிழத்தெரு பகுதியில் உள்ள உட்புற சாலைகளை மேம்படுத்துவதற்காக ரூ.8.1 லட்சம் செலவிலும்,  பேட்டை பாலூர்-தாமனாங்குடி பிரதான சாலையை மேம்படுத்த ரூ.16.82 லட்சம் செலவிலும் என மொத்தம் ஒரு கோடியே 13 லட்சம் செலவில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதியில் சாலைகளை மேம்படுத்துவதற்கான பூமிபூஜை நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில், புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் கலந்துகொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்தனர். ஆதிதிராவிடர் நலத்துறை செயற்பொறியாளர் ஏகாம்பரம், உதவிப்பொறியாளர் சாம்பசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: