கஜா புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் தருவதாக ஏமாற்றிவிட்டனர் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் மக்கள் புகார்

நாகை, பிப்.13: நாகை மாவட்டம் நாகை ஒன்றியம் பாலையூர் ஊராட்சியில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினரும், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கேஸ் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி கழக செயலாளர் கார்மேகம் வரவேற்றார். கூட்டத்தில்  தலைமை கழக பிரதிநிதியும், மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளருமான கிரகாம்பல் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுவை பெற்று சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் பொதுமக்கள் பேசுகையில்,

கொள்ளிடம் கூட்டு குடிநீர் தண்ணீர் வருவதே இல்லை. கஜா புயலின் போது அமைச்சர் வேலுமணி குடிநீர் சுத்தகரிபு நிலையம் புதிதாக தொடங்கி வைத்தார். ஆனால் அது செயல்படவே இல்லை. ரூ.200 கொடுத்து ஓட்டு வாங்கி வந்த அதிமுக ஆட்சியில் தரமற்றதாக கொடுத்த மிக்சி, கிரைண்டர், பேன் பயன்படுத்தாமலேயே குப்பைக்கு சென்று விட்டது. கஜா புயலில் பாலையூர் ஊராட்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் நிவாரணம் வழங்காமல் ஏமாற்றி விட்டார்கள்.  பாலையூர் ஊராட்சிக்கு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான  சமூதாய கூடம் கட்டி

தரவேண்டும் என்றனர்.

Related Stories: