வேதாரண்யத்தில் நிவாரணம் வழங்குவதில் மெத்தனம் அதிகாரிகளை கண்டித்து போராட்டம்

வேதாரண்யம், பிப்.13: வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம் விஏஓ அலுவலகம் முன், கஜா புயலால் பாதித்து நிவாரணம் வழங்காமல் விடுபட்ட அனைவருக்கும்  நிவாரணம் வழங்க கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

உண்ணாவிரத்திற்கு  கிளைச் செயலார்  வடுகையன் தலைமை வகித்தார்.  உண்ணாவிரத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி  மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள் சுப்பிரமணியன், வெற்றியழகன், பன்னீர்செல்வம், செந்தில்குமார், இளையபெருமாள் மற்றும் மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் வசந்தா, ஒன்றியச் செயலாளர் பாரதி உள்ளிட்ட பலர்

கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை ஓட்டுமாடி வீடுகளுக்கு அரசு அறிவித்த நிவாரணம் இன்னும் பல பேருக்கு கிடைக்கவில்லை அதிகாரிகள் பலமுறை வாக்குறுதி கொடுத்தும் நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே உடன் நிவாரணம்

வழங்கிட வேண்டும்.

தென்னை மா, சவுக்கு, புளி, முந்திரிகளுக்கு முறையாக கணக்கெடுத்து  பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமும் வரவு வைக்கப்படவில்லை. எனவே முறையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். கஜா புயல் நிவாரணப் பணியில் கிராம நிர்வாக அலுவலரின் அலட்சிய போக்கை கைவிட வேண்டும் என்று கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.

Related Stories: