ஹெல்மெட் அணிய தந்தையை கட்டாயப்படுத்த வேண்டும் மாணவர்களுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் அறிவுறுத்தல்

ஜெயங்கொண்டம்,பிப்.13: ஹெல்மெட் அணிய தந்தையை கட்டாயப்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் அறிவுறு வழங்கினார்.

வட்டார போக்குவரத்து துறை சார்பில் ஜெயங்கொண்டம் தனியார் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கில் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணபவன் பேசும்போது,

பள்ளி மாணவர்களாகிய நீங்கள் பெற்றோரை தூண்ட வேண்டும் ஹெல்மெட் போடாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டக்கூடாது சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டக்கூடாது மது அருந்திவிட்டு எந்த வாகனத்தையும் ஓட்டக்கூடாது நீங்கள் அமர்ந்து செல்லும் வாகனத்தை இயக்குபவர் மது அருந்தினால் எழ மாட்டோம் என கூற வேண்டும். பெற்றோர்களிடம் நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.

மேலும் பள்ளிக்கு வரும் பொழுதும் செல்லும் பொழுதும் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது. பள்ளிக்கு வரும் பொழுதும் பள்ளி முடிந்து செல்லும் பொழுதும் சாலையில் இடது புறமாகவே நடந்தோ சைக்கிளிலோ செல்லவேண்டும் கோடிட்ட இடங்களில் மட்டுமே சாலையை கடக்க வேண்டும் நீங்கள்தான் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் இவ்வாறு பேசினார்.

கருத்தரங்கில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் ராமதாஸ் பள்ளி தாளாளர் முத்துக்குமரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

Related Stories: