கோவை அரசு மருத்துவமனையில் ஒரே எண்ணில் மூன்று பிரிவுகள் நோயாளிகள் குழப்பம்

கோவை, பிப். 13:  கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் புறநோயாளிகளாக 7,500 பேர், உள் ேநாயாளிகளாக 1,700 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, மாத்திரை வழங்கும் இடம், வார்டுகள் உள்ளிட்டவை உள்ளது. மருத்துவமனையில், நோயாளிகள் எளிதில் சென்று சிகிச்சை பெற அந்த பிரிவுகள், வார்டுகளுக்கு குறிப்பிட்ட எண் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு, உணவு வழங்க ரசீது அளிக்கும் இடம், புதிய பில்டிங்கில் மதியத்திற்கு மேல் செயல்படும் மாத்திரை வழங்கும் இடம் ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் 1 என்ற ஒரே எண் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் நோயாளிகளிடம் 1ம் நம்பர் சென்று சிகிச்சை பெறவும், மருந்து வாங்கவும் பரிந்துரை செய்கின்றனர். 3 பிரிவுகளுக்கு 1 என்ற எண் இருப்பதால், நோயாளிகள் குழப்பம் அடைந்துள்ளனர். இது குறித்த புகார்கள் அளிக்கப்பட்டது. இது குறித்து மருத்துவமனையின் டீன் அசோகன் கூறுகையில், “ஒரே எண் ெகாண்ட சிகிச்சை பிரிவுகளை மாற்றவும், புதிய எண்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Related Stories: