அவினாசி ரோடு 9 கி.மீ தூர மேம்பாலத்திற்காக 300 இடத்தில் தாங்கு தூண்

கோவை, பிப்.13: கோவை அவினாசி ரோடு மேம்பாலத்திற்காக 300 இடத்தில் தாங்கு தூண் அமைக்க சர்வே முடிந்து குறியீடு அமைக்கப்பட்டுள்ளது. ேகாவை அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தில் இருந்து சின்னியம்பாளையம் வரை 9.3 கி.மீ தூரத்திற்கு எலிவேட்டர் காரிடார் என்ற நீண்ட தூர மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்படவுள்ளது. இதற்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ேகாவையின் பெரிய மேம்பாலமாகவும், அடையாளமாகவும் இந்த பாதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பாலம் கட்டுவதற்காக கடந்த சில மாதங்களாக மண் ஆய்வு நடந்தது. இதை தொடர்ந்து இறக்கை பாதை, சந்திப்பு ரோடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது மேம்பால தூண் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் குறியீடு அமைக்கப்பட்டுள்ளது. குறியீடு அமைக்கப்பட்ட இடத்தில் தாங்கு தூண் அமைக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெண்டர் விடப்படும் என தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) அறிவித்தது. ஆனால்,மேம்பால பணிக்காக இதுவரை டெண்டர் விடப்படவில்லை.  இந்த திட்டத்திற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்னும் தடையின்மை ஒப்புதல் வழங்கவில்லை. இதன் காரணமாக டெண்டர் விடும் பணி தாமதமாகி வருகிறது. மேம்பாலம் கட்டும் பணி தொடர்பாக பல்வேறு தொழில் அமைப்புகளிடம் நெடுஞ்சாலைத்துறையினர் கருத்து கேட்டனர். இதன் அடிப்படையில் திட்ட வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. ஒரிரு மாதத்தில் ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் வெளியிடப்பட்டு பணிகள் துவக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: