ரத்து செய்யப்பட்டிருந்த சேலம்-கரூர் பயணிகள் ரயில் வரும் 15ம் தேதி முதல் இயக்கம்

சேலம், பிப்.13:   ரத்து செய்யப்பட்டிருந்த சேலம்-கரூர் பயணிகள் ரயில் வரும்15ம் தேதி முதல் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சேலம்-நாமக்கல்-கரூர் அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு, சேலத்தில் இருந்து கரூருக்கு தினமும் (ஞாயிறு தவிர) 2 பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களை திருச்சி மற்றும் மதுரைக்கு நீட்டிக்க வேண்டும் என சேலம், நாமக்கல், கரூர் பகுதி பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த  2ம் தேதியில் இருந்து காலை 6 மணிக்கு இயக்கப்பட்டு வந்த சேலம்- கரூர்(56105), கரூர்-சேலம்(56108) பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த ரயில்கள் வரும் 15ம் தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, சேலம்- கரூர் பயணிகள் ரயில் (56105) , சேலம் ரயில் நிலையத்தில்  காலை 6.05 மணிக்கு புறப்பட்டு, மல்லூர், ராசிபுரம், நாமக்கல் வழியாக கரூருக்கு காலை 8.15 மணிக்கு சென்றடையும். இந்த திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படுகிறது.

இதேபோல், கரூர்-சேலம் பயணிகள் ரயில் (56106), கரூரில் காலை 8.35 மணிக்கு புறப்பட்டு, நாமக்கல், ராசிபுரம், மல்லூர் வழியாக சேலத்துக்கு 10.45 மணிக்கு வந்து அடைகிறது. இந்த ரயில் ஞாயிற்று கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படுகிறது.  சேலம்- கரூர் பயணிகள் ரயில் (56107), சேலம் ரயில் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு  கருரூக்கு இரவு 7.30 மணிக்கு சென்றடைகிறது. கரூர்-சேலம் பயணிகள் ரயில் (56108),கரூரில் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு சேலத்துக்கு இரவு 9.50 மணிக்கு வந்து அடைகிறது. இந்த ரயில்கள் ஞாயிறு   தவிர மற்ற நாட்களுக்கு இயக்கப்படுகிறது என்று சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

Related Stories: