மலை கிராம அரசு பள்ளிகளுக்கு கல்விச்சீர்

காடையாம்பட்டி, பிப்.13: காடையாம்பட்டி  ஒன்றியம் டேனிஷ்பேட்டை மலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  இந்த பள்ளிக்கு, மலை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சார்பில், நேற்று கல்விச்சீர் வழங்கப்பட்டது. இதனை காடையாம்பட்டி தொடக்க கல்வி அலுவலர் அமலா, பள்ளியின்  தலைமை ஆசிரியை புவனா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து மலை கிராம பழங்குடி மாணவ, மாணவிகள், நாட்டுப்புற பாடலுக்கு நடனமாடி தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர். இதில்  பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள், ஊர்  பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.கடம்பூர்: கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடந்தது.  ஆத்தூர் ஆர்டிஓ செல்வன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்  அந்தோணிமுத்து முன்னிலை வகித்தார்.

பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம்  வரவேற்று பேசினார். குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்  பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக வழங்கினர். தலைமை ஆசிரியர்  செல்வம் பெற்றுக்கொண்டார். மக்கள் கல்விச்சீராக வழங்கிய புரஜெக்டர்  மூலம் காணொலி காட்சியை ஆர்டிஓ செல்வன் தொடங்கி வைத்து, வாழ்த்தி பேசினார்.  விழாவில் ஆசிரியர் பயிற்றுநர்கள் பாலமுருகன், செல்வராஜ், சுப்ரமணியன்,  வறுமை ஒழிப்பு சங்கம் கங்காதேவி, ஜீவிதா, லதா பள்ளி மேலாண்மை குழு ஜெயந்தி  மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர். முடிவில்  கல்வி மேலாண்மை குழு  மீனாம்பிகா நன்றி கூறினார். வாழப்பாடி: வாழப்பாடி அருகே உள்ள துக்கியாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 170 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர் இப்பள்ளிக்கு கல்வி சீர் வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. மாணவர்களின் பெற்றோர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு கல்வி சீர் வரிசை வழங்கப்பட்டது. இதை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டனர்.

Related Stories: