பெண்ணை கொலை செய்து காவிரி ஆற்றில் வீசியது ஏன்? கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்

ேமட்டூர், பிப்.13: மேட்டூர் பெண்ணை கொடூரமாக கொலை செய்து காவிரி ஆற்றில் வீசிய சம்பவத்தில் கைதான 3 பேர், போலீசில் பரபரப்பு வாக்குமூலம்  அளித்துள்ளனர்.சேலம் மாவட்டம் ேமட்டூரை அடுத்த கொளத்தூர் காளையனூரை  சேர்ந்த குருநாதன் மகள் பழனியம்மாள்(38). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு  மேட்டூர் காவிரி நீர்த்தேக்க பகுதியில் வயிறு பகுதி கத்தியால் அறுக்கப்பட்டு, கற்களை  கட்டியபடி நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.  இதுகுறித்து கொளத்தூர் ேபாலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இதில், பழனியம்மாளுக்கு 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.  கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்துள்ளார். அவர்களும் இறந்த நிலையில்,  சகோதரியின் அரவணைப்பில் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு,  பழனியம்மாளின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த மாரியப்பனின் வைக்கோல் போர்  தீப்பற்றி எரிந்துள்ளது. இதற்கு பழனியம்மாள் தான், காரணம் என்று கூறி,  மாரியப்பன் அவரை தாக்கியுள்ளார்.பதிலுக்கு பழனியம்மாளும் அவரை கல்லால்  தாக்கியதால், ஆத்திரத்தில் கூட்டாளிகளுடன் சேர்ந்து, அவரை மாரியப்பன் கொலை  செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இந்த கொலையை செய்த காளையனூரை சேர்ந்த  மாரியப்பன் என்ற வெள்ளையன்(40), பழையூரை சேர்ந்த மாது என்ற மாதப்பன்(50),  கருங்கல்லூரை சேர்ந்த சுப்ரமணியம் (39) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து மாரியப்பன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்,  வைக்கோல் போரை எரித்த விவகாரத்தில் பழனியம்மாள் மீது ஆத்திரத்தில்  இருந்தேன். இதனால் அவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று மாது, சுப்ரமணியம்  ஆகியோரிடம் கூறினேன். சம்பவத்தன்று மாலை 3 பேரும் தோட்டத்தில் உறங்கிக்  ெகாண்டிருந்த பழனியம்மாளை கல்லால் சரமாரியாக தாக்கினோம். அதில் அவர்  இறந்துவிட்டார். பின்னர் சடலத்தை ஆற்றுப்பகுதிக்கு இழுத்து வந்து, வயிற்றை  கத்தியால் அறுத்து, அதற்குள் கல்லை வைத்து கட்டி ஆற்றில் வீசினோம் என்றார். இதையடுத்து அவர்களிடமிருந்து வயிற்றை அறுக்க  பயன்படுத்திய கத்தி, கொலை செய்ய பயன்படுத்திய கல், 3 பேரும் ஓட்டிவந்த பைக்  போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும்  மேட்டூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சேலம் மத்திய  சிறையில் அடைத்தனர்.

Related Stories: