பெரம்பலுார் மாவட்டத்தில் மின் இணைப்புக்காக காத்திருக்கும் 5 ஆயிரம் விவசாயிகள் மின்நுகர்வோர் குறைதீர்நாள் கூட்டத்தில் குற்றச்சாட்டு

பெரம்பலூர்,பிப்.13:  பெரம்பலூர் மாவட்டத்தில் மின் இணைப்பு வேண்டி பதிவு செய்து காத்திருக்கும் சுமார் 5ஆயிரம் விவசாயிகளுக்கு 2019-2020ம் ஆண்டுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் பெரம்பலூரில் நடந்த மின்நுகர்வோர் குறை தீர்க்கும்நாள் கூட்டத்தில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டன.

பெரம்பலூர் தமிழ்நாடு மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவல கத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கோட்ட செயற்பொறியாளர் பிரகாசம் தலைமை வகித்தார். பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் கருப்பையா மின்நுகர்வோர் தரப்பு குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜாசிதம்பரம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மின்நுகர் வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏற்கனவே அளித்த கோரிக்கை மனுக்களுக்கு மின்வாரி யம் சார்பாக பதில் தருவதில்லை. மனுக்களுக்கு தவறாமல் பதில் தரவேண்டும்.

விவசாய மின்இணைப்பு வேண்டி 2000வது ஆண்டு, ஏப்ரல் 1ம் தேதிக்கு பின் சுமார் 18ஆண்டு, 6மாதங்களாக மனு செய்து காத்திருப்பவர்களுக்கு  மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இன்று வரை பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 5ஆயிரம் பேர்களுக்கு மேல் மின் இணைப்பு வேண்டி பதிவுசெய்து காத்திருப்பவர்களுக்கு தங்களுக்கு மின் இணைப்பு கிடைக்காததற்கான காரணம் தெரியாமல் உள்ளனர்.காத்திருப் போரு க்கு மின்இணைப்பு வழங்கப்படாதற்கான காரணத்தை மின்சாரவாரியம் தெளிவுப்படுத்த வேண்டும்.

இலவசமாக 2ஆயிரமாவது ஆண்டு மார்ச் மாதம் 31ம்தேதி வரை பதிவு செய்த வர்களுக்கு மின்இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு பின் 2000 ஆண்டு ஏப்ரல் 1ம்தேதிக்கு பிறகு, இலவசமாக மின்இணைப்பு வழங்க, சாதாரண முன்னுரிமைக்காக இலக்கீடு ஒதுக்காமல், விவசாயிகளை ஏமாற்றி வரும் செய லினை தமிழக அரசு கைவிட வேண்டும்.

முன்பு கடைபிடித்தபடி சாதாரண முன்னுரிமை மின்இணைப்பு இலக்கீட்டினை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் மின் இணைப்பு வேண்டி பதிவுசெய்து காத்திருக்கும் சுமார் 5ஆயிரம் விவசாயிகளுக்கு 2019-2020ம் ஆண்டுக்குள் மின் இணைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர்கள் மாணிக்கம், கரிகால்சோழன், உள்ளி ட்ட பல ரும் கலந்து கொண்டனர். இதில் பல்வே று தரப்பிலிருந்து 15மனுக்கள் பெறப்ப ட்டது.

Related Stories: