சேந்தமங்கலம் ஒன்றியத்தில் ₹1.25 கோடி மதிப்பில் சாலை பணி தொடக்கம்

சேந்தமங்கலம், பிப்.13: சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ₹1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான சாலை பணியை எம்எல்ஏ சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 14வது மாநில நிதிக்குழு திட்டத்தில் உத்திரகிடிகாவல் ஊராட்சி நாச்சிபுதூர்-தெத்துக்காடு சாலை சீரமைப்பு பணிக்காக ₹22.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்குறிச்சி அணைக்கட்டு முதல் அண்ணா நகர் சாலை அமைக்க ₹6.77 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. துத்திக்குளம் ஊராட்சியில் தேவேந்திரதெரு மயானசாலை, சின்னகுளம் சாலை பணிக்கு ₹20.13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தங்கநிலையம், செல்லியம்மன் கோயில் சுந்தரா காலனியில் ₹12 லட்சத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படவுள்ளது. கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி வடுகப்பட்டியில் பாப்பான்குளம் சாலை பணிக்காக ₹8.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாழவந்திக்கோம்பை ஊராட்சி பள்ளம்பாறை குட்டிக்கரடு சாலை, தாதன்கோம்பை, பூச்சான்குட்டை சாலை பணிக்கு ₹55.99 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  ஆக மொத்தம் ₹1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் கலந்துகொண்டு ஊராட்சிகளில் சாலை, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராஜேந்திரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர்கள் அருள்குமார்.

Related Stories: