வேலைவாய்ப்பை உருவாகும் அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை பொறியாளர்கள் கருத்து

புதுக்கோட்டை, பிப். 13:  தமிழக  அரசு  நேற்று தாக்கல் செய்த 2019-20 பட்ஜெடில் வேலை வாய்ப்பை  பெருக்குவதற்கான முறையான அறிவிப்போ, திட்டமோ ஏதும் இடம் பெறவில்லை என்று  பொறியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 தமிழக பட்ஜெட்டை   தாக்கல் செய்த துணை முதல்வரும், நிதியமைச்சரு மான ஓ.பன்னீர்செல்வம், 2019-20 ம் நிதியாண்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடியாக  இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக தமிழகத்தின் அனைத்து எதிர்கட்சிகளும் இந்த பட்ஜெட்டை  விமர்சித்து பேசியுள்ளனர்.

 இந்நிலையில் வேலைவாயப்புக்கான சிறப்பு திட்டம்  இருக்கும் என்று படித்த இளைஞர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால்  இதுகுறித்து தமிழக பட்ஜெட்டில் ஏதாம் இல்லாதது பெருத்த ஏமாற்றமாக இருப்பதாக  பொறியில் படித்து மாணவர்கள் தெரிவிக்கின்றனர். திறன்மேம்பாடு என்ற  அறிவிப்பு எவ்வாறு செயல்படுத்தப்படும் என்ற தெளிவு இல்லை. இதில்  மாணவர்களுக்கு எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை என்று குற்றசாட்டுகின்றனர்.  

மென்பொருள் துறையில் பணியாற்றும் மரவப்பட்டி பிரபு: தமிழகத்தில் பொறியியல் படித்த மாணவர்கள் வேலை கிடைக்காத  சூழ்நிலையில் கிடைத்த வேலையில் பணியாற்றி வருகின்றனர். மேலும் பலருக்கு ஒரு  வேலை கூட கிடைக்காமல் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு வேலை கிடைக்கும்  வகையில் தமிழக அரசு பட்ஜெட்டில் சிறப்பு அறிவிப்புகள் இருக்கும் என்று  எதிர்பார்த்தோம். பல அறிவிப்புகள் வெளியிட்டிற்கும் மாநில அரசு இளைஞர்கள்  வேலைவாய்ப்பு குறித்த எந்த அறவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இதனால்  வரும் ஆண்டுகளில் இளைஞர் வேலைவாய்ப்பு மேலும் அதிகரிக்கும் என்பதில்  சந்தேகமில்லை. இதனால் இந்த பட்ஜெட் கூட்ட தொடர் முடிவதற்குள் தமிழக அரசு  சிறப்பு விதியின் கீழ் வேலைவாய்ப்பு பெருக்கு வதற்கு தகுந்த திட்டத்தினை  அறிவித்து தாதமின்றி செயல்படுத்த வேண்டும் என்றார்.

பொறியாளர்  சீனிவாசன்:  தமிழக அரசின் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் வேலைவாயப்பு  குறித்து சிறப்பு திட்டங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்போம். ஆனால்  அறிவிப்பு இருக்காது. இதேபோல் இந்த ஆண்டும் வேலைவாய்ப்பு குறித்து எந்த  சிறப்பு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. குறிப்பாக இந்த ஆண்டு தமிழக  பட்ஜெட்டில்  பொறியியல் பட்டதாரிகளுக்கு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து  பயிற்சி, ஆண்டுதோறும் 10,000 வேலையில்லா பொறியியல் பட்ட தாரிகள்  பயனடைவார்கள். 38 கோடி ரூபாய் செலவில் 20 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள்  அமைக்கப்படும்.  தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகத்துக்கு ரூ.200 கோடி  ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகள்

இடம் பெற்றுள்ளது.

இந்த திட்டம் எவ்வாறு  செயல்படுத்தப்படும். இதில் மாநிலம் முழுவதும் வேலையில்லாத பொறியாளர்கள்  பயன்பெற முடியாமா என்று தெளிவான அறிவிப்பு இல்லை. மேலும் இந்த திட்டம்  எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்று தெளிவான அறிவிப்பும் இல்லை. ஆக  மொத்தத்தில் வேலைவாயப்பை பெருக்கும் அளவில் இந்த பட்ஜெட் இல்லை என்றார்.

Related Stories: