ஆலங்குடி வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இன்றி வியாபாரிகள் கடும் அவதி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

ஆலங்குடி,பிப்.13:ஆலங்குடி வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இன்றி வியா பாரிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பழமையான வாரசந்தைகளில் ஒன்று ஆலங்குடி வாரச்சந்தை. இச்சந்தை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட சந்தை யாகும்.இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை நடந்து வருகிறது. இந்த சந்தையில் 1000க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பல்வேறு பொருட்களை விற்பனை

செய்து வருகின்றனர்.

இந்த சந்தைக்கு ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்பட்ட பாச்சிக்கோட்டை, பாப் பான்விடுதி, புதுக்கோட்டைவிடுதி, கும்மங்குளம், அரசடிப்பட்டி, பள்ளத்தி விடுதி, ஆலங்காடு, கல்லாலங்குடி, கீழாத்தூர், மேலாத்தூர், கோவிலூர், வம்பன், பாப்பான்பட்டி, வேங்கிடகுளம், குப்பகுடி, கரும்பிரான்கோட்டை, பாத்தம்பட்டி உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், கறம்பக் குடி தாலுகாவிற்குட்பட்ட மாங்கோட்டை, நம்பன்பட்டி, சம்பட்டிவிடுதி உட்பட சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற் பட்ட பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

சுமார் 3 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த சந்தையில் இடநெருக்கடி காரணமாக பல கடைகள் ரோட்டிலேயே அமைக்கப்படுகின்றன. இதனால், மழை காலங்களில் சேரும் சகதியுமாக காணப்படும். மேலும், இந்த சந்தைக்கு வாரந்தோறும் ஆயிர க்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள் என பலரும் வந்து செல்லு கின்றனர்.

இந்நிலையில், ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியா பாரிகள் இயற்கை உபாதைகளை கழிக்க கழிவறை

அமைக்கப்பட்டது.  அந்த கழி வறை சுகாதாரமற்ற நிலையிலும், போதுமான தண்ணீர் வசதி இல்லாத தாலும் பல மாதங்களாக பூட்டு போடப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் என அனைவரும் இயற்கை உபாதை களை கழிக்க முடியாமல் அவதி

யடைந்து வருகின்றனர்.

மேலும், சந்தைப்பகுதியில் குடிநீருக்கா எந்தவிதமான வசதியும் ஏற்படுத்தவில்லை.எனவே ஆலங்குடி வாரச்சந்தையில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர வேண்டும் என்று பொதுமக்களும், வியாபாரிகளும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரி

க்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்திலே பழமையான அதிலும் முக்கியமான சந்தையில் ஆலங்குடி சந்தையும் ஒன்று. இந்த சந்தைக்கு ஆலங்குடி பகுதியில் உள்ள சுமார் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பொருட்களை வாங்க வருகின்றனர். வாரச்சந்தை நாளன்று கடை விரிக்க இடம் இல்லாத அளவிற்கு கூட்டம் அலைமோதும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் கழிவறை கட்டப்பட்டது. ஆனால் அந்த கழிவறை பயன்படுத்த முடியாத நிலை யில் கழிவறையின் கதவுகள் உடைந்தும் பூட்டுப்போடப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் அவதிப்படுகிறோம்.

மேலும் பெண் வியாபாரிகள் படும்பாடு சொல்லிமாளாது. சந்தையில் குடிப்ப தற்கு குடிநீரும் கிடைப்பதில்லை. வீட்டில் இருந்தே குடிநீரை கொண்டு வருகி றோம். கழிவறை வசதி இல்லாததால் தாகம் எடுத்தாலும் தண்ணீர் குடிக்க முடியாமல் அவதியடைந்து வருகிறோம். எனவே ஆயிரக்கணக்கான வியாபாரி களின் நலன் கருதி கழிவறை வசதியும், குடிநீர் வசதியும் ஏற்படுத்த

வேண்டும் என்றனர். துர்நாற்றம் வீசுகிறது.. நோய் பரவும் அபாயம்..

பேரூராட்சி நிர்வாகம் சந்தைதிடலை சரிவர சுத்தம் செய்வதில்லை. வாரச்சந்தை நடக்கும் இடத்தை பேரூராட்சி

நிர்வாகம் சுத்தம் செய்யய வேண்டும்.

மேலும், மீன், நண்டு ஆகியவற்றின் கழிவுகள் சந்தையில் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கி ன்றது. அதனால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்பரவும் அபாயமும் ஏற்பட் டுள் ளது. அசுத்தம் காரணமாக வியாபாரிகள் அங்கு கடை வைக்காமல் மண்தரை யில் காய்கறிகளை போட்டு சுகாதாரமற்ற முறையில் வியாபாரம் செய்கின்றனர். மழைக்காலங்களில் சந்தை முழுவதும் சேறும் சகதியுமாக இருக்கும். ஆங்காங்கே மழைநீர் தேங்கி துர்நாற்றம் அடிக்கும்.எனவே பேரூராட்சி நிர்வாகம் மேடு பள்ள மாக உள்ள சந்தைப்பகுதியை காய்கறி மற்றும் அனைத்து வகையான பொருட் களையும் சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய சந்தை முழுவதும் சிமெண்ட்தளம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் சொர்ணகுமார் தெரிவித்தார்.

Related Stories: