வருடத்திற்கு ரூ.6ஆயிரம் மத்திய அரசு அறிவிப்பு கணினி சிட்டா பெற அலைமோதும் விவசாயிகள்

பொன்னமராவதி,பிப்.13:  வருடத்திற்கு ரூ.6ஆயிரம் மத்திய அரசு அறிவித்திருப்ப தால் பொன்னமராவதி பகுதியில் கணினி சிட்டா  எடுக்க மக்கள் அலை மோதுகின்றனர்.

பொன்னமராவதி சிறு, குறு விவசாயிகளுக்கான பிரதமமந்திரி கிசான் திட்டத் தின் கீழ்,  ஆதரவுத்தொகை பெறுவதற்கான விண்ணப்பபடிவம் கொடுப்பதில் மக்கள் ஆர்வமாக  உள்ளனர். சமீபத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து விவசா யிகளுக்கும்  வருடத்திற்கு ரூ.6ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவி த்தது. இவை  வருடத்திற்கு மூன்று தவணையாக தகுதியுள்ள விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என  அறிவித்தது.  இந்த தொகை பெறுதற்கு விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தின்  கணினி சிட்டா, ஆதார் அட்டை, வங்கி கணக்கு பாஸ் புத்தகம், போன்ற ஆவணங்கள்  கிராம நிர்வாக அலுவலர்களிடம் கொடுத்து பதிவு செய்ய வேண்டும் என  அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொன்னமராவதி பகுதியில் கணினி சிட்டா  எடுக்கும் இடமெல்லாம் கூட்டம் அலைமோதுகின்றது. மேலும் ஒரு சில இடங்களில்  இதற் கான விண்ணப்பபடிவம் மற்றும் போட்டோ பெறப்படுகின்றது. மற்ற இடங்களில்  வாங்கப்படவில்லை.  இதனால் பொதுமக்கள் விண்ணப்பிப்பதில் அலைகின்றனர். சரியாக  வழிகாட்டி நெறிமுறைகள் இல்லாமலும் விண்ணப்பிக்க கடைசி நாள் தெரியாமலும் , முந்தினவர்களுக்குத்தான் கிடைக்கும் என கருதி இசேவை மையம், மற்றும்  இன்டர்நெட் சென்டர், ஜெராக்ஸ் எடுக்கும் இடம் ஆகியவைகளிலும் விஏஓ  அலுவலகத்திலும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.

இந்த தொகை பெற  என்னென்ன சரியான ஆவணங்கள், விண்ணப்பிக்க கடைசி நாள் எந்த தேதி என்பதை சம்மந்தப்பட்ட  அதிகாரிகள் முறையாக விளக்கி கூறவேண்டும்.

Related Stories: