உத்தனபள்ளி எருதாட்டத்தில் 2 மாடுகள் பலி 25 வீரர்கள் காயம்

சூளகிரி, பிப். 13: சூளகிரி அருகே, உத்தனபள்ளி கிராமத்தில் எருதாட்டம் நடைபெற்றது. இதில் மாடுகள் நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் 2 மாடுகள் பலியானது. 25 மாடு பிடி வீரர்கள் காயமடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உத்தனபள்ளி கிராமத்தில் நேற்று எருதாட்டம் நடைபெற்றது.  உத்தனபள்ளி ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியில் காலை 11 மணிக்கு தொடங்கிய எருதாட்டத்தில், சூளகிரி, உத்தனப்பள்ளி, பாத்தகோட்ட, உலியாளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 100 மேற்பட்ட கிராம மக்கள் திரளாக வந்தனர். கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மடக்கி பிடிக்க முயன்றனர்.

அப்போது பிடியில் சிக்காத மாடுகள் தூக்கி வீசியதில் 25 மேற்பட்டோர்  காயமடைந்தனர். உடனடியாக அவர்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்கை–்கு சேர்த்தனர்.

அப்போது, 2 மாடுகள் நேருக்கு நேராக மோதி அங்கேயே பலியானது. இதில் ஒரு மாடு ராயக்கோட்டை பகுதியை சேர்ந்ததும், மற்றொன்று சூளகிரி சக்காலு கிராமத்தை சேர்ந்த பசவராஜ் என்பவரது ஆகும்.

பின்னர் பலியான இரண்டு மாடுகளை கிராமமக்கள் பூஜை செய்து குழி ேதாண்டி புதைத்தனர்.

Related Stories: