மாவட்ட அளவிலான சுகாதார விழிப்புணர்வு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கிருஷ்ணகிரி, பிப்.13:  கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் நடந்த பெண் கல்வி, சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் 2018&19ம் ஆண்டு சமூக பங்கேற்பு நிகழ்ச்சிகள் வரையறுக்கப்பட்டு ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் முதல் நிகழ்ச்சியாக பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் போட்டிகள் நடத்தப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்ப்ளளிகள், சிறப்பு உண்டு உறைவிடப் பள்ளி மற்றும் கேஜிபிவி பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களிடையே பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் ஒன்றிய அளவில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்தும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஓவியம், பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த 16 மாணவர்கள் வீதம் 10 ஒன்றியங்களிலிருந்து 160 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற ஓவியம், பேச்சு, கட்டுரை போட்டிகளில் 8 பிரிவுகளில் முதல் 3 இடங்கள் பெற்ற 24 மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பங்கேற்று, 24 மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர்கள் நாராயணா, சூசைநாதன், தலைமை ஆசிரியர் மகேந்திரன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: