என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் வழக்கிலிருந்து ஜெயித்து மீண்டு வருவேன் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேட்டி

ஓசூர்,பிப்.13: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நேற்று முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கூறியதாவதுபொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு குறி த்து நாடே அறியும். 1998ம் ஆண்டில் ஓசூர் பகுதியில், விஷ சாராயம் குடித்து 48 பேர் இறந்தனர். அன்றைய தினம் தமிழகத்தில் ஒரு கறுப்பு தினமாகும். இந்சூழ்நிலையில் எங்கள் பகுதியில் சில கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்தது இதனை கண்டித்தும், கள்ளச்சாராய விற்பனைக்கு போலீசார் உடந்தையாக உள்ளனர் என்பதை கண்டித்தும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.  இப்போராட்டத்தில் போலீசார் தங்கள் பாதுகாப்பிற்காக பொய் வழக்கு போட்டனர். இந்த பொய் வழக்கில்தான் எனக்கு இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரம் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம், ஆனால் தவறே செய்யாத ஒரு நிரபராதி, தண்டிக்கப்படக்கூடாது என்ற பழமொழிக்கேற்ப, இந்த பொய் வழக்கிலிருந்து கண்டிப்பாக நான் ஜெயித்து வெளியே வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக தலைமையில் நிறைய கட்சிகளை சேர்த்து, பலமான கூட்டணி அமைக்க முதலமைச்சரும், துணை முதல்வரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக. தலைமையில், பல கட்சிகள் கூட்டு சேர உள்ளன. கூட்டணி தொடர்பாக முதல்வரும், துணை முதல்வரும் எடுக்கும் முடிவே, நிர்வாகிகளின் முடிவாகும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், பிரதமர் தேர்வில், அதிமுக மிகப்பெரிய சக்தியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.பேட்டியின்போது, முன்னாள் எம்பி பெருமாள், ஓசூர் நகர செயலாளர் நாராயணன், கெலமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் ஹாரிஷ்ரெட்டி,   ஓசூர் ஒன்றிய துணை செயலாளர் ஜெயராம் ஆகியோர் இருந்தனர்.

Related Stories: