பட்டுக்கோட்டையில் ேபரழிப்புக்கு எதிரான பேரியக்கம் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்

பட்டுக்கோட்டை, பிப். 13: ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட தமிழ் மக்கள் மீது திணிக்கப்படும் பேரழிப்புத் திட்டங்களை ரத்து செய்யக் கோரி வரும் 23ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தஞ்சையில் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் மாபெரும் மக்கள் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு இந்த திட்டங்கள் குறித்து மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் முடிவு செய்து அதன்படி கடந்த மாதம் 25ம் தேதி தஞ்சை மாவட்டத்தில் நம்மாழ்வார் பிறந்த ஊரான இளங்காட்டில் மக்கள் சந்திப்பு இயக்கம் துவங்கப்பட்டது.

அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர் மாவட்டம் வரை தொடர்ந்து பயணிக்க முடிவு செய்து அதன்படி மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மக்கள் சந்திப்பு இயக்கம் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று நடந்தது. பேருந்து நிலையம் பகுதியில்  பொதுமக்களிடம் இது குறித்து  துண்டறிக்கை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் நிறுவனத் தலைவர் லெனின், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநிலத் தலைவர் தங்கசண்முகசுந்தரம் ஆகியோர் பொதுமக்களிடம் துண்டறிக்கைகளை வழங்கினர்.  பேரழிப்புக்கு எதிரான பேரியக்க மூத்த நிர்வாகி பிச்சையப்பா, ஒருங்கிணைப்பாளர்கள் வைரவமூர்த்தி, ராஜா, விக்னேஷ் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: