ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

வேப்பனஹள்ளி, பிப்.13:  வேப்பனஹள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்கத்திற்கான மாத்திரைகள் வழங்குவது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

இம்முகாமில் குடற்புழு நீக்கத்திற்கு தேவையான அல்பெண்டிசோல் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அனிமியா நோய் தடுப்பு முறைகள், இரும்பு சத்து மாத்திரை பயன்படுத்துதல், அயோடின் உப்பு பயன்படுத்துதல், தொற்று மற்றும் தொற்றா நோய் அறிகுறிகள், தடுப்பு முறைகள், நீரினால் பரவும் நோய்கள், குளோரினேசன் செய்த நீரை பருகுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

மேலும், தொழுநோய் பரவும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. சிவந்த உணர்ச்சியற்ற தேமல் இருந்தால் தொழுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே, உடனடியாக பரிசோதிப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் மற்றும் பல் மருத்துவர் ராஜ்குமார் ஆகியோர் பேசினர். பெண்களுக்கான கர்ப்பப்பை பிரச்னைகள் மற்றும் அறிகுறிகள் குறித்து மருத்துவர் பூவிழி விளக்கமளித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாதையன் நன்றி கூறினார்.

Related Stories: