அதிராம்பட்டினத்தில் புதிதாக கட்டி 5 ஆண்டுகளாக பூட்டி கிடப்பதால் குடோனாக மாறிய பயணியர் விடுதி

அதிராம்பட்டினம், பிப். 13: அதிராம்பட்டினத்தில் புதிதாக கட்டியும் 5 ஆண்டுகளாக பூட்டியே கிடப்பதால் குடோனாக மாறிய பயணிகள் தங்கும் விடுதியை உடன் சீரமைத்து திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் துர்கா செல்லியம்மன் கோயில் அருகில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பயணிகள் விடுதி 40 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டு அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிராம்பட்டினம் பகுதிக்கு வரும் போது தங்கி வந்தனர். மேலும் புயல், சுனாமி போன்ற நேரங்களில் இவர்கள் தங்கி இருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பாக பல நலத்திட்ட உதவிகளை செய்வது வழக்கம்.

இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் பயணிகள் விடுதி பழுதடைந்து நெடுஞ்சாலை துறைமூலம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் திறக்காமல் உள்ளனர். உடனடியாக கட்டித்தை சீரமைத்து திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் சார்பாக இன்பநாதன் என்பவர் கூறுகையில், பயணிகள் தங்கும் விடுதியில் அரசு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தங்கி அதிராம்பட்டினம் பகுதிக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்வார்கள்.

அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் வந்தால் தங்குவதற்கு இடமில்லாமல் பட்டுக்கோட்டை நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான பயணிகள் விடுதியில் தங்குகின்றனர். இப்போது புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் ஒப்பந்ததாரர்களின் குடோனாக மாறியுள்ளது. மேலும் ஒப்பந்ததாரர்கள் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களையும் பயணியர் விடுதி வளாகத்தில் நிறுத்தியுள்ளனர். எனவே உடனடியாக பயணியர் விடுதியை சீரமைத்து திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர் என்றார்.

Related Stories: