மன்னார்குடியில் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம்

 மன்னார்குடி, பிப். 13:நகராட்சி  துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான திடக்கழிவு மேலாண்மை குறித்து 2 நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் மன்னார்குடியில்  நடைபெற்றது.

தமிழக நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் அறிவுறுத்தலின் பேரில் மன் னார்குடி, பட்டுக்கோட்டை  நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர் கள் மற்றும் மேற் பார்வையாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை மற்றும் கையாளுதல் குறித்து  2 நாள் பயிற்சி முகாம் மன்னார்குடி கோபால சமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் பங்கேற்ற துப்புரவுப் பணியாளர்களுக்கு  திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு, குப்பைகளை தரம் பிரித்தல், தரம் பிரிக்கப்பட்ட குப் பைகளை கையாளுதல், உரமாக்குதல், மறுசுழற்சிக்கு பயன் படுத்துதல் மற்றும் அபாயகரமான கழிவுகளை பாதுகாப்பாக அப்புற படுத்துதல் குறித்து பயிற்சியளிக்கப் பட்டது. மேலும்  குப்பைகள் உருவாகும் இடத்திலேயே அவற்றை சேகரித்து மக்கும் மற்றும் மக்கா குப்பைகளாக தரம் பிரித்து அந்த பகுதியிலேயே உரமாக்குவது குறித்தும் பயிற்சியளிக்கப் பட்டது.முகாமில் மன்னார்குடி நகராட்சியை சேர்ந்த 60 துப்புரவு பணியாளர்களுக்கு 2 நாட்களும், பட்டுக்கோட்டை நகராட்சியை சேர்ந்த 60 துப்புரவு பணியாளர்களுக்கு 2 நாட்களும் பயிற்சியளிக்கப்படுகிறது. முன்னதாக நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு மன்னார்குடி நகராட்சி ஆணை யர் விசுவநாதன் தலைமை வகித்தார். முகாமை நகர் நல அலுவலர் டாக்டர் சந்திரசேகரன் துவக்கி வைத்தார். முகாமில் பங்கேற்றுள்ள துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பட்டுக்கோட்டை நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்டிபன், மன்னார்குடி நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், பிரபாகரன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.

Related Stories: