ரங்கத்திற்குள் வாகனம் செல்வதற்கு ஏப்.1 முதல் நுழைவு கட்டணம் கிடையாது ஆணையர் அதிரடி

திருச்சி, பிப்.13:  ரங்கத்திற்குள் வரும் வாகனங்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் முதல் நுழைவு கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: ஸ்ரீரங்கத்திற்குள் வாகனம் செல்வதற்கு கட்டணம் வசூலிப்பதை வரும் மார்ச் மாதத்துடன் நிறுத்துவதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி ரங்கம் கோட்டத்திற்குட்பட்ட மூன்றாண்டு காலத்திற்கான குத்தகை இனமான ஸ்ரீரங்கத்திற்கு வந்து செல்லும் உள்ளூர் தனியார் நகர பஸ்கள், நகர சிற்றுந்துகளுக்கு கட்டணம் வசூல்செய்திடவும்

மற்றும் சுற்றுலா பஸ்கள், வேன்களுக்கு நிறுத்த கட்டணம்வசூல்செய்துகொள்ளும் உரிமம் 1.4.16 முதல் 31.3.19 வரை ஏலம் விடப்பட்டுஉரிமதாரரால் வசூல் செய்யப்பட்டு வந்தது. மேற்கண்ட இனத்தினைபொதுமக்களின் நலன் கருதி குத்தகை இனத்திலிருந்து 1.4.19 முதல் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே, ரங்கத்திற்கு வந்து செல்லும் உள்ளூர் தனியார் நகர பஸ்கள், நகர சிற்றுந்துகளுக்கு கட்டணம் மற்றும் சுற்றுலா பஸ்கள் வேன்களுக்கு 1.4.19 முதல் கட்டணம் ஏதும் செலுத்தாமல் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் செய்திகுறிப்பில் கூறியிருக்கிறார். ஏற்கனவே கட்டணங்கள் கூடுதலாக மூன்று மடங்குவரை வசூலிக்கப்பட்டு வருவதாக தொடர் புகார் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாநகராட்சி ஆணையரின் இந்த அறிவிப்பு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: