ஹெல்மெட் வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம்

புதுச்சேரி, பிப். 13:  புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவா கூறியதாவது:  உச்சநீதிமன்றம் ஹெல்மெட்  கட்டாயம் என்று சொன்னாலும் ஒரே நாளில் ெஹல்மெட் அணிவதை முழுமையாக கொண்டு  வர முடியாது. இந்த சட்டத்தை வைத்து கொண்டு மக்களை வாட்டி வதைத்து மன  உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றனர். முதல்வர், டிஜிபியிடம் பேசிவிட்டேன்  என்று சொன்ன பிறகும், வீதியில் இறங்கி போக்குவரத்து செயலர், ஹெல்மெட்  அணிந்து வருகிறார்களா? என பார்க்கும் அளவுக்கு கவர்னர் அழுத்தம் கொடுக்கிறார். கடந்த ஜனவரி  மாதம் மட்டும் 21 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  எதையும்  படிப்படியாக தான் கொண்டு வர முடியும். சட்டப்படி செயல்படுவேன் என்றால்  குறைந்த பட்ச கூலி நிர்ணய சட்டத்தை ஏன்? அமல்படுத்தவில்லை. கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கு  ஏன்? சம்பளம் போடவில்லை. மாநில நிர்வாகியாக இருக்கும் கவர்னருக்கு  பொறுப்பு இல்லை.  ஹெல்மெட் அணிவதை அரசியல் விளையாட்டு போல செய்து  வருகிறார். இது சைக்கோவின் செயலைப்போல இருக்கிறது. 11 ஆயிரத்து 260 பேர்  மீதும் போடப்பட்ட வழக்குகளை உடனே வாபஸ் பெற வேண்டும் திமுக வழக்கறிஞர் அணி  பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக சட்ட உதவிகளை செய்யும். இதை கண்டித்து திமுக மிகப்பெரிய போராட்டம் நடத்தும் என்றார்.

Related Stories: