உணவு போட்டியில் பங்கேற்க

பெயர்களை பதிவு செய்ய வேண்டும்புதுச்சேரி, பிப். 13:  புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஆதர்ஷ், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் மூலம் கடந்த 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் ஷெஹ்ரி சம்ரிதி உத்சவ் விழாவில், புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகள் இணைந்து எண்ணெய் இல்லாத உணவு, நெருப்பை பயன்படுத்தி செய்யாத உணவு, மூலிகை உணவு, சிறுதானிய உணவு, சர்க்கரை இல்லாத உணவு ஆகிய தலைப்புகளில் உணவு போட்டி நடத்த உள்ளது.

 இப்போட்டியில் புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி பகுதிகளை சேர்ந்த 18 வயது முதல் 25 வயதுக்குள் உள்ள அனைவரும் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் உழவர்கரை நகராட்சி மற்றும் புதுச்சேரி நகராட்சி பகுதியில் உள்ள தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் அலுவலகத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். அலுவலக முகவரி: உதவி திட்ட அதிகாரி, புதுச்சேரி நகராட்சி, பெரியார் நகர், நெல்லித்தோப்பு, மேரி பின்புறம், புதுச்சேரி, தொலைபேசி எண்: 0413-2204502, 9443558943. உதவி திட்ட அதிகாரி, உழவர்கரை நகராட்சி, மேரி உழவர்கரை, புதுச்சேரி - 10, தொலைபேசி எண்: 0413-2292427, 9488494545. பதிவு செய்யும் போது மேற்கண்ட தலைப்புகளில் எந்த பிரிவில் உணவு தயாரித்து கொண்டு போட்டியில் கலந்து கொள்வார்கள் என்பதை குறிப்பிட வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பிரிவில் தரமாகவும், சுத்தமாகவும் வீட்டிலேயே தயாரித்து இன்று (13ம் தேதி) மாலை 5.30 மணியளவில் காந்தி திடலில் நடைபெறும் விழாவில் தேர்வுக்குழுவினர் பார்வைக்கு வைக்க வேண்டும். தேர்வுக்குழுவினர் தாங்கள் தயாரித்த உணவினை பரிசோதித்து பின் கொடுக்கப்படும் மதிப்பெண்களில் முதல் 2 இடங்களை பிடிக்கும் சிறந்த உணவு தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மறைந்து வரும் நமது உணவு கலாச்சாரத்தை மீட்டெடுக்கவும், சத்து நிறைந்த நமது பண்டைய உணவு வகைகளை மீண்டும் ஞாபகப்படுத்தி கொள்ளவும், மேற்படி உணவு போட்டியில் பங்கேற்கவும், பார்வையிடவும் அனைவரும் வருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளனர்.

Related Stories: