பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான சட்ட உரிமை விழிப்புணர்வு முகாம்

புதுச்சேரி, பிப். 13:   புதுவை முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் `பெண்களுக்கான சட்ட உரிமை மற்றும் சேவைகள்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் பூங்காவனம் முன்னிலை வகித்தார். சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சோபனாதேவி கலந்து கொண்டு பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்ட உரிமைகள், அவர்களுக்கான சிறப்பு சேவைகள், அதனை அணுகும் முறைகள், சட்ட விழிப்புணர்வு முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். ஆணையத்தின் மூத்த வழக்கறிஞர் ஷாகிதா பர்வீன்குமார், சட்டப்பணிகள் ஆணையம் குறித்து முன்னுரை வழங்கினார்.கல்லூரி மனையியல் துறை பேராசிரியையும், கல்லூரியின் சட்ட சேவை மையத்தின் தலைவருமான அலமேலுமங்கை வரவேற்றார். மையத்தின் மாணவர் உறுப்பினர் ஹேமாவதி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் அனைத்து துறைகளையும் சேர்ந்த மாணவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: