வாக்குப்பதிவு இயந்திரம் விழிப்புணர்வு முகாம்

சின்னசேலம், பிப். 13: கல்வராயன்மலையில் வாக்கு பதிவு இயந்திரம் பயன்படுத்தும் முறை மற்றும் இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.சின்னசேலம் தாலுகாவிற்கு உட்பட்ட வடக்கநந்தல், சின்னசேலம், கல்வராயன்மலை, நைனார்பாளையம்  குறுவட்டங்களில் கடந்த 7ம் தேதி முதல் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் ஒப்புகை சீட்டுடன் கூடிய வாக்கு பதிவு இயந்திரம் பயன்படுத்தும் முறை மற்றும் இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது.   கல்வராயன்மலையில் உள்ள முண்டியூர், மட்டப்பட்டு, தொரடிப்பட்டு, கொட்டபுத்தூர், மேல்பாச்சேரி, மேல்வாழப்பாடி உள்ளிட்ட வாக்குச்சாவடி முகாம்களில் கடந்த ஒருவார காலமாக விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது. முண்டியூர், மேல்பாச்சேரி, வெள்ளிமலை வாக்குசாவடி மையங்களில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுராஜா தலைமையில் ஆசிரிய பயிற்றுநர் ராஜா முன்னிலையில்  இளம் வாக்காளர்களும், பொதுமக்களும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் முறை மற்றும் நம்பகத்தன்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். வெள்ளிமலை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் தனசேகரன், தலைமை காவலர் சிக்கந்தர், கிராம உதவியாளர்கள் சக்திவேல், மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: