தாய் திட்டியதால் தூக்கு போட்டு தொழிலாளி சாவு

காலாப்பட்டு, பிப். 13: விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்புத்துப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட அனிச்சங்குப்பத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் வீரபத்திரன் மகன் அருட்செல்வம்(24), கூலி தொழிலாளி. இவரது தாயார் பாக்கியம்லல்லி, வீட்டில் பெரியவர்கள் கூறுவதை கேட்க மாட்டாயா என அருட்செல்வத்திடம் கோபமாக கேட்டுள்ளார். இதனால் அவர் கோபித்து கொண்டு வீட்டில் சாப்பிடாமல் தனிமையில் இருந்து வந்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் அருட்செல்வம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலையை முடித்துவிட்டு தாயார் பாக்கியம் லல்லி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அருட்செல்வத்தின் உடலை கைப்பற்றி கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அருட்செல்வத்தின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: