கருணைக்கிழங்கு பயிரிட விவசாயிகள் ஆர்வம்

சங்கராபுரம், பிப். 13: அதிக விளை நிலங்களை கொண்ட பகுதியாக சங்கராபுரம் தாலுகா உள்ளது. இந்த பகுதியில் உள்ள மூலக்காடு, புளியாங்கோட்டை, லக்கிநாயக்கன்பட்டி, ரங்கப்பனூர், பூட்டை, செம்பராம்பட்டு, கல்லேரிக்குப்பம், குச்சிக்காடு, மூரார்பாளையம் உட்பட பல கிராமங்களில் மாற்றுப்பயிராக கருணைக்கிழங்கை பயிரிடுவதில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து வேளாண் ஆலோசகர் வின்வின்குமார் கூறுகையில், மருத்துவ குணம் கொண்ட கருணைக்கிழங்கை சங்கராபுரம் பகுதியில் பயிரிட அதிக அளவில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது ஆறு மாதகால பயிராக உள்ளது. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. களை எடுக்க வேண்டும். உழவர் சந்தையில் நேரடி விற்பனை செய்யும் போது விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது. குறைந்த செலவில் அதிக லாபம் தருவதாலும் மருத்துவ குணம் கொண்டது என்பதாலும் இதை பயிரிட விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார்.

Related Stories: