சிதம்பரம் பேருந்து நிலையத்தில் சுகாதாரமின்றி இலவச சிறுநீர் கழிப்பிடம்

சிதம்பரம், பிப். 13: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோயிலும், பழமை வாய்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகமும் உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். சிதம்பரம் பேருந்து நிலையத்தில் மயிலாடுதுறை பேருந்துகள் நிற்கும் இடம் அருகே உள்ள சிறுநீர் கழிப்பிடம் தூய்மையாக இல்லாததால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. சிறுநீர் கழிப்பிடத்திற்கு வெளியேயும் மக்கள் சிறுநீர் கழித்து செல்கின்றனர். இதனால் மயிலாடுதுறை, சீர்காழி, காரைக்கால் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் துர்நாற்றத்தால் மிகவும் அவதியுறுகின்றனர். நகராட்சி நிர்வாகம் சிறுநீர் கழிப்பிடத்தை தினமும் தண்ணீர் பீய்ச்சி அடித்து சுத்தம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது சரிவர சுத்தம் செய்யாததால் துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது. அப்பகுதியில் உள்ள இலவச சிறுநீர் கழிப்பிடத்தை அங்கிருந்து அகற்றி பேருந்து நிலைய பின் பகுதியில் அமைக்க வேண்டும் என பேருந்து பயணிகளும், சமூக

ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: