விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப திட்ட பயிற்சி

விருத்தாசலம், பிப். 13:

தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில திட்டங்

களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் சார்பில் கலைநிகழ்ச்சிகள் மூலம் வேளாண் தொழில்நுட்ப திட்டங்களை பற்றி விளக்கும் பயிற்சி விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்றது. விருத்தாசலம் வேளாண் உதவி இயக்குனர் ரமேஷ் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், வேளாண் அலுவலர் சபிதா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் உமாமகேஸ்வரி, உதவி தொழில்நுட்ப துணை மேலாளர்கள் தேவேந்திரன், குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியின் மூலம் மானாவாரி மேம்பாட்டுத்திட்டம், கூட்டுப்பண்ணைத்திட்டம், நீடித்த நிலையான மானாவரி திட்டம், நுண்ணுயிர் பாசனத்திட்டம் உள்ளிட்ட மத்திய, மாநில விவசாய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் விருத்தாசலம், கம்மாபுரம், மங்களம்பேட்டை, பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி, முஷ்ணம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வந்திருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Related Stories: