பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

விருதுநகர், பிப். 13: சிவகாசியில் மூடிக் கிடக்கும் பட்டாசு ஆலைகளால், வேலையிழந்து தவிக்கும் பட்டாசு தொழிலாளர்களுக்கும், தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

விருதுநக பழைய பஸ்நிலையம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திர்கு நகரச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். விருதுநகர்  வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துவேல் மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் நேரு  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், ‘சிவகாசியில் மூடிக் கிடக்கும் பட்டாசு ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலையில்லாத பட்டாசு தொழிலாளர்களுக் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன் கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு நவ.13ம் தேதி முதல் பட்டாசு  ஆலைகளை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 8 லட்சம் பேர் வேலையை இழந்து உள்ளனர். இதற்க்கு காரணமான உச்சநீதிமன்ற தீர்ப்பை  மத்திய, மாநில அரசு உரிய முறையில் வாதிட வேண்டும். 110 விதியின் கீழ், தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் விவசாயிகள், தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வாகாது. நிரந்தரமான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்தி, ஊதியத்தை அதிக்கரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: