அடிப்படை வசதி கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

திருவில்லிபுத்தூர், பிப். 13:  திருவில்லிபுத்தூர் அருகே, அடிப்படை வசதி கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவில்லிபுத்தூர் அருகே, அச்சம்தவித்தான் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வடக்கு அச்சம்தவிர்த்தானில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இவர்களுக்கு போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்படுகின்றனர். இது குறித்து பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக நமது தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், வடக்கு அச்சம்தவிர்த்தானில் அடிப்படை வசதி செய்து தரவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சசிகுமார், ஊர் தலைவர்கள் கருத்தப்பாண்டி, சின்னதுரை ஆகியோர் தலைமையில், ஊர் பொதுமக்கள், அச்சம்தவிர்த்தான் ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, ‘அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பான விளம்பர பதாகைகளை கையில் ஏந்தி அமர்ந்தனர். நகர் இன்ஸ்பெக்டர் பவுல்ஏசுதாஸ்

மற்றும் அதிகாரிகள் சமரசம் செய்ததால், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அடிப்படை வசதிகோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: