3 மாதமாக பட்டாசு ஆலைகளுக்கு பூட்டு தற்கொலை தவிர வேறு வழியில்லை 2வது நாள் போராட்டத்தில் தொழிலாளர்கள் உருக்கம்

சிவகாசி, பிப். 13: மூன்று மாதமாக பட்டாசு ஆலைகள் பூட்டிக் கிடப்பதல், தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என 2வது நாள் போராட்டத்தில் தொழிலாளர்கள் உருக்கமுடன் தெரிவித்தனர்.  விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, 2வது நாளாக நேற்று போராட்டம் தொடர்ந்தது. இதில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் பேசியதாவது:கோர்ட் உத்தரவினால் சிவகாசி முடக்கம்இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் ஜஹாங்கீர்: சிவகாசியில் இந்த தொழிலை விட்டால் வேறு தொழில் இல்லை. பல லட்சம் தொழிலாளர்களை வாழவைக்கும் இந்த பட்டாசு தொழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல பிரச்னைகளை தாண்டி நடந்து வந்துள்ளது. அதேபோல, தற்போது ஏற்பட்டிருக்கிற பிரச்சனையும் இந்த போராட்டம் மூலம் வென்று காட்டுவோம். கோர்ட் உத்தரவினால் பட்டாசு ஆலைகள் பூட்டிக்கிடப்பது தொழிலாளர்கள் மட்டுமே பாதிக்கவில்லை. சிவகாசியில் அனைத்து தொழில்களும் முடங்கி கிடக்கின்றன. இந்த பிரச்னையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஓட்டு மூலம் பதில் சொல்லுங்கள்முன்னாள் நகர்மன்ற தலைவர் ஞானசேகரன்: பட்டாசு  தொழிலை காப்பாற்றும் இடத்தில் இருக்கும் மத்திய, மாநில அரசுகள் அலட்சியாக உள்ளன. டாஸ்மாக் கடை மூலம் வசூல் சாதனை என்று தமிழக அரசு செய்தி வெளியிடுகிறது. ‘ஆபரேசன் சக்ஸஸ்; ஆள் காலி’ என்பது போன்று தமிழக அரசின் நடவடிக்கைகள் உள்ளன. தொழிலாளர்களை பட்டினி போட்டே கொலை செய்யும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு ஓட்டு மூலம் பதில் சொல்லுங்கள். மதுக்கடைகளுக்கு அனுமதி, பட்டாசு ஆலைகளுக்கு பூட்டாபட்டாசு தொழிலாளி முத்துமாரி: பட்டாசு ஆலைகளை மூடியதால் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சிரமப்படுகிறோம். மகளிர் குழுக்களில் வாங்கிய கடன்களுக்கு வட்டி கட்ட முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் வீட்டுப் பாத்திரங்களை தூக்கிச் செல்கின்றனர். 3 மாத காலமாக பட்டாசு ஆலைகள் பூட்டிக்கிடப்பது பற்றி அரசாங்கம் கவலைப்படவில்லை. மதுக்கடைகளுக்கு அனுமதி கொடுக்கும் அரசாங்கம் எங்களுக்கு தொழில் செய்ய வழிமுறையை செய்து கொடுக்கவில்லை. தாலி அறுக்கும் மதுக்கடைகளுக்கு அனுமதி கொடுக்கும் அரசாங்கம் சோறுபோடும் பட்டாசு ஆலைகளை திறக்க முயற்சிக்கவில்லை. சீக்கிரம் பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்.

தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லைபட்டாசு தொழிலாளி சாந்தி: எனக்கு மூன்று மகன்கள் உள்ளனர். நான் வேலைக்கு போய்தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலை எனக்கு உள்ளது. வேலையில்லாததால் பால் வாங்க கூட காசில்லை. பட்டாசு ஆலைகளை திறக்காவிட்டால் குடும்பத்தோடு தீக்குளிப்பதை தவிற வேறு வழியில்லை. பட்டினி கிடந்து சாக வேண்டியது தான்பட்டாசு தொழிலாளி கலைவானி: பட்டாசுத் தொழில் முடங்கிப் போனதால் எங்களது வாழ்க்கையும் முடங்கி விட்டது. 3 மாதமாக பட்டாசுத்தொழில் இல்லை. பட்டினி கிடந்தே சாக வேண்டியது தான் என்ற நிலையில் உள்ளோம். எதை வைத்து சாப்பிடுவது என தெரியவில்லை. வெடி மிளகாய் போட்டு கஞ்சி குடிக்கிறோம்பட்டாசு தொழிலாளி தமயேந்தி: வெடி மிளகாய் போட்டு கஞ்சி குடிக்கும் நிலையில் உள்ளோம். ரேஷனில் கொடுக்கும் அரிசி போதவில்லை. அதிலும் பாதி பச்சரிசியாக தருகின்றனர். கடைகளில் மிளகாய் கூட கடன் தர மறுக்கின்றனர். சுயஉதவிக் குழுக்காரர்கள் கடன் கொடுக்கவில்லை. அடுத்த வேளை உணவை நினைத்து ஒவ்வொரு நொடியும் எண்ணிட்டு இருக்கோம்.

Related Stories: