காதலர் தினத்தில் பொது இடங்களில் எல்லை மீறுவோரை போலீசில் ஒப்படைக்க முடிவு

தேனி, பிப்.13: காதலர் தினத்தில் பொது இடங்களில் எல்லை மீறுவோரை போலீசில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்து எழுச்சி முன்னணியின் தேனி மாவட்ட செயற்குழுக் கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியன்று தேனி மாவட்டத்தில் வைகை அணை, சுருளிஅருவி, வீரப்ப அய்யனார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்து, பொதுமக்கள் கூடுமிடங்களில் எல்லை மீறுவோரை போலீசில் ஒப்படைப்பது எனவும், பிடிபடும் காதலர்களுக்கு பெற்றோர்களை அழைத்து இருவீட்டார் சம்மதத்தோடு திருணம் நடத்தி, பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது. கூட்ட முடிவில் ஒன்றிய தலைவர் அய்யப்பன் நன்றி கூறினார்.இதேபோல் மற்றொரு அமைப்பான இந்து முன்னணி அமைப்பினை சேர்ந்த தேனிநகரத் தலைவர் கார்த்திக் கூறியதாவது: ஆங்கிலேய கலாச்சாரமான காதலர் தினத்தை தமிழ் கலாச்சாரத்தோடு தொடர்புபடுத்தி, தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதத்தில் பெற்றோர்களுக்கு தெரியாமல் பொதுவெளியில் சுற்றித் திரியும் காதல்ஜோடியினரை பிடித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து வைப்பது என தெரிவித்தார்.

Related Stories: