வானம் தெளிவாக காணப்படும் மாவட்ட கலெக்டர் உத்தரவு மூங்கிலனை காமாட்சியம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா மூகூர்த்தகால் நாட்டுதல் நிகழ்ச்சி

தேவதானப்பட்டி, பிப். 13: தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சியம்மன் கோயிலில் மாசிமகா சிவராத்திரி திருவிழா மூகூர்த்தகால் நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.தேவதானப்பட்டிக்கு வடக்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் மஞ்சளாற்றின் நதிக்கரையில் மூங்கிலனை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. காஞ்சி காமாட்சியம்மனுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்றது இந்த அம்மனுக்கு விக்ரகம் கிடையாது, அடைக்கப்பட்ட குச்சுவீட்டின் கதவிற்கு மூன்று கால பூஜை நடத்தப்படுகிறது. இங்கு மேலும் உறுமி, சங்கு, சேகண்டிகள் முழங்க நடைபெறும் சாயரட்சை பூஜையில் சயன உத்திரவு கேட்பது இத்திருக்கோயிலின் சிறப்பம்சம்.கோயிலில் இரவு, பகல் அணையாத நெய்விளக்கு எரிகின்றது. தீபாராதனைக்கு முன் தேங்காய் உடைக்கப்படுவதில்லை. வாழைப்பழம் உரிக்கப்படுவதில்லை. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த அம்மனை குலதெய்வமாக வழிபடலாம். திருமணம் தடைபடும் பெண்கள் இந்த கோயிலில் பூ முடித்துப்பார்த்து உத்திரவு பெற்று திருமணம் நிச்சயிக்கின்றனர்.நேற்று காலை காமாட்சியம்மனின் பக்தையும் ஆதிஜமீன்தாரினியும், பரம்பரை அறங்காவலர்களின் மூதாதையுமான காமாக்காளுக்கு சிரார்த்தம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பூஜை செய்து முகூர்த்தக்கால் நடப்பட்டது. மாசிமகா சிவராத்திரி திருவிழா வரும் மார்ச் 4ந் தேதி தொடங்கி 11ந் தேதி வரை நடக்கவுள்ளது.இந்த திருவிழாவினை காண வட தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். முகூர்த்தக்கால் நாட்டுதல் நிகழ்ச்சியில் செயல் அலுவலர் சந்திரசேகரன், பரம்பரை அறங்காவலர்கள் தனராஜ்பாண்டியன், கனகராஜ்பாண்டியன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: