சதூர்வேதமங்கலத்தில் மாசிமக திருவிழா கொடியேற்றம்

சிங்கம்புணரி, பிப். 13: சிங்கம்புணரி அருகே சதூர்வேத மங்கலத்தில் குன்றக்குடி ஆதீனத்திற்கு உட்பட்ட ஆத்தமநாயகி அம்மன் ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசிமக திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்ற விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு கோயில் கொடி மரத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் ரிஷப கொடி ஏற்றப்பட்டு தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்று கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 14ம் தேதி வியாழக் கிழமை திருக்கல்யாணமும், 15ம் தேதி இரவு கழுவன் திருவிழாவும், 18ம் தேதி திங்களன்று திருத்தேரோட்டமும் 19ம் தேதி தீர்தவாரி நடைபெறும். மேலும் மண்டகப்படியாளர்கள் கோயில் நிர்வாகம் சார்பாக தினமும் இரவில் நான்கு ரதவீதியில் கேடகம், சிம்மம், ரிஷபம், குதிரை வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடைபெறும்.அதேபோல் அரளிப்பாறை அரவன்கிரிமலை உச்சியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில் கொடி யேற்று விழா நடைபெற்றது.

Related Stories: